/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செங்கழுநீர் அம்மன் கோவிலில் மண்டல பூஜை
/
செங்கழுநீர் அம்மன் கோவிலில் மண்டல பூஜை
ADDED : ஜன 08, 2025 05:17 AM

மயிலம் : மயிலம் அடுத்த தென்கொளப்பாக்கம் கிராமத்தில் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டல பூஜை நடந்து வருகிறது.
மயிலம் அருகே உள்ள தென்கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணிகள், மகா கும்பாபிஷேம் கடந்தடிசம்பர் 5ம் தேதி நடந்தது.
இதனை தொடர்ந்து மண்டல பூஜைகள்தினசரி நடந்து வருகிறது.
இதை முன்னிட்டு அம்மனுக்கு பால், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. 32ம் நாள் மண்டல பூஜை விழாவில் செங்கழுநீர் அம்மன்சிறப்பு அலங்காரத்தில்பக்தர்களுக்கு காட்சி யளித்தார்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.