/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் மஞ்சு விரட்டு கிராமங்களில் கோலாகலம்
/
விழுப்புரத்தில் மஞ்சு விரட்டு கிராமங்களில் கோலாகலம்
விழுப்புரத்தில் மஞ்சு விரட்டு கிராமங்களில் கோலாகலம்
விழுப்புரத்தில் மஞ்சு விரட்டு கிராமங்களில் கோலாகலம்
ADDED : ஜன 17, 2026 06:02 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தை பொங்கலையொட்டி மஞ்சு விரட்டும் நிகழ்ச்சி நடந்தது.
மாட்டுப் பொங்கலையொட்டி நேற்று, விவசாயிகளுக்கு உறுதுணையாக உள்ள ஆடு, மாடுகள் மற்றும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்கள் வீடுகள் முன் புது பானை வைத்து, புது அடுப்பு மூட்டி பொங்கல் வைத்து மக்கள் வழிபட்டனர்.
அப்போது, உழவுக்கும், வீடிற்கும் துணை நிற்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து, கொம்புகளில் வர்ண்ணம் தீட்டி, அணிகலன்களை பூட்டி, மாவிலை, பூமாலை அணிவித்தும், கால்நடைகளையும் விவசாயிகள் வழிபட்டனர்.
இதனையடுத்து, கிராமங்களில் மஞ்சு விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மாடுகளை அழைத்துச்சென்று, கோவில் திடலில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
பொது மக்கள் புத்தாடை அணிந்து, மாட்டு வண்டிகள் பூட்டியும், பல்வேறு புதிய வாகனங்களில் திரண்டு முக்கிய வீதிகளில் பொங் கலோ பொங்கல் என கோஷ மிட்டபடி உலா வந்தனர்.
விழுப்புரம் மருதுார், பானாம்பட்டு, ராகவன்பேட்டை, வழுதரெட்டி, சாலாமேடு, கண்டமானடி, வி.அரியலுார், குச்சிப்பாளையம், மரகதபுரம், அத்தியூர் திருவாதி, பிடாகம், வளவனுார், நரையூர், வாணியம்பாளையம், அற்பிசம்பாளையம்.
காணை, வளவனுார், விக்கிவாண்டி சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில், மாட்டு பொங்கலையொட்டி, மஞ்சு விரட்டும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. ஏராளமான பொது மக்கள், சிறுவர்கள் திரண்டு , மாட்டு வண்டிகளில் சென்று மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

