/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மஞ்சுளா டி.வி.எஸ்., ஷோரூம் திறப்பு விழா
/
மஞ்சுளா டி.வி.எஸ்., ஷோரூம் திறப்பு விழா
ADDED : நவ 16, 2025 03:34 AM

திண்டிவனம்: மரக்காணம் சன்னதி தெருவில் மஞ்சுளா டி.வி.எஸ்., புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் கதிரவன் தலைமை தாங்கினார். மஞ்சுளா டி.வி.எஸ்., பொது மேலாளர் அஜய் வரவேற்றார்.
புதிய ஷோரூமை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குநர் அம்ஜத் அலி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து, இரு சக்கர வாகனத்தின் இயக்குநர்கள் மஞசுளா கதிரவன், சங்கமித்ரா, சாய்ஹர்ஷன் குத்துவிளக்கேற்றினர்.
விழாவில் டி.வி.எஸ்., மோட்டார்ஸ் கம்பெனியின் விற்பனை மண்டல மேலாளர் பத்மநாபன், ஏரியா விற்பனை மேலாளர் அர்ஜூன், ஏரியா சர்வீஸ் மேலாளர் அருள்மணி செல்வன், விற்பனை பகுதி மேலாளர் சந்தோஷ் ஜேம்ஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.
மஞ்சுளா டி.வி.எஸ்., திண்டினம் கிளை மேலாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.

