/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உடல் உழைப்பு நலவாரியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
உடல் உழைப்பு நலவாரியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : மே 14, 2025 12:46 AM

செஞ்சி : வல்லம் அடுத்த திருவம்பட்டு ஊராட்சியில் கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பயனாளி கள் சேர்க்கை முகாம் நடந்தது.
தொழிலாளர் நலன் மற்றும் சமூக பாதுகாப்பு நல வாரிய உறுப்பினர் சிவா தலைமை தாங்கினார்.
ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ராஜசேகரன் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி தலைவர் முருகன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ., பயனாளிகள் சேர்கையை துவக்கி வைத்து பேசினார்.
பி.டி.ஓ., உதயகுமார், ஒன்றிய செயலாளர்கள் துரை, இளம்வழுதி மற்றும் நலவாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.
பெண்களிடம் வசூல்
தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்து விடுவதாக சிலர் 1,000 முதல் 2,000 ரூபாய் வரை வசூலித்து விட்டு உறுப்பினர் அட்டை வாங்கித் தராமல் ஏமாற்றி விட்டதாக முகாமுக்கு வந்த பெண்கள் புகார் தெரிவித்தனர்.
உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு அரசு ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்துள்ளது.
இவற்றை பெறுவதற்கு வசதியாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.