/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க.,வில் 'சீட்' பெற பலர் ஆர்வம் முக்கிய புள்ளிகள் மவுனம்
/
அ.தி.மு.க.,வில் 'சீட்' பெற பலர் ஆர்வம் முக்கிய புள்ளிகள் மவுனம்
அ.தி.மு.க.,வில் 'சீட்' பெற பலர் ஆர்வம் முக்கிய புள்ளிகள் மவுனம்
அ.தி.மு.க.,வில் 'சீட்' பெற பலர் ஆர்வம் முக்கிய புள்ளிகள் மவுனம்
ADDED : பிப் 13, 2024 05:24 AM
கள்ளக்குறிச்சி தொகுதியில்,போட்டியிட அ.தி.மு.க., நிர்வாகிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். முக்கிய புள்ளிகள் மட்டும் மவுனமாக உள்ளனர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணி 7 லட்சத்து 21 ஆயிரத்து 713 ஓட்டுகளும், அ.தி.மு.க., கூட்டணி 3 லட்சத்து 21 ஆயிரத்து 794 ஓட்டுகளும், அ.ம.மு.க., 50 ஆயிரத்து 179 ஓட்டுகளும் பெற்றன. இதையடுத்து 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளில் தி.மு.க.,வும், கள்ளக்குறிச்சி, ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய தொகுதிகள் அ.தி.மு.க.,வும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் 3 லட்சத்து 99 ஆயிரத்து 919 ஓட்டுகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்றார். ஆனால், 2021ம் ஆண்டு சட்டசபை தொகுதி தேர்தலில், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து, தி.மு.க., கூட்டணி 5 லட்சத்து 84 ஆயிரத்து 714 ஓட்டுகளும், அ.தி.மு.க., கூட்டணி 5 லட்சத்து 64 ஆயிரத்து 487 ஓட்டுகளும் பெற்றன.
தி.மு.க., அணி 20 ஆயிரத்து 227 ஓட்டுகள் மட்டுமே, அ.தி.மு.க., அணியைவிட கூடுதலாக பெற்றது. ஒரு சட்டசபை தொகுதிக்கு சராசரியாக 3 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே, தி.மு.க., அணி கூடுதலாக பெற்றுள்ளது.
இதனால், வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில், கட்சி நிர்வாகிகள் பலரும் 'சீட்' பெற ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி., காமராஜ், ஒன்றிய செயலாளர் ராஜசேகர் மட்டுமின்றி, நகர செயலாளர் பாபு, மருத்துவ அணி குமரேசன், பொன்னரசு, ஜெ., பேரவை ஞானவேல், பாசறை வினோத், சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மூத்த நிர்வாகி ராமசாமி ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.
இத்தொகுதியில், ஆளுங்கட்சியை எதிர்கொள்ள வலுவான வேட்பாளரை களமிறக்க, அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்.பி., தரப்பில், தலைமை சொன்னால் மட்டும் போட்டியிடலாம் என தயக்கத்தில் உள்ளனர். இதற்கிடையே கட்சியின் நிர்வாகிகள் பலரும் மிகுந்த நம்பிக்கையுடன், 'சீட்' பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.