/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு புகுந்து 30 சவரன் நகை கொள்ளை விழுப்புரம் அருகே முகமூடி கும்பல் அட்டகாசம்
/
வீடு புகுந்து 30 சவரன் நகை கொள்ளை விழுப்புரம் அருகே முகமூடி கும்பல் அட்டகாசம்
வீடு புகுந்து 30 சவரன் நகை கொள்ளை விழுப்புரம் அருகே முகமூடி கும்பல் அட்டகாசம்
வீடு புகுந்து 30 சவரன் நகை கொள்ளை விழுப்புரம் அருகே முகமூடி கும்பல் அட்டகாசம்
ADDED : ஏப் 09, 2025 07:24 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே வீடு புகுந்து, 30 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி அணிந்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த சொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா ,65; இவர் தனது வீட்டில் அயர்னிங் கடை வைத்துள்ளார். துபாயில் பணிபுரியும் இவரது மகன் உதயகுமாருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு சீர்வரிசையைாக வந்த நகைகளை வீட்டில் பீரோவில் வைத்திருந்தனர்.
திருமணம் நடந்த வீட்டில் நகைகள் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 4 பேர் முகமூடி அணிந்தபடி, நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து, உள்ளே பீரோவை திறந்து 26 சவரன் நகை, 9,000 ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு வெளியே வந்தபோது ஹாலில் துாங்கிக் கொண்டிருந்த ராதாவின் மாமியார் பத்மாவதி, 78; அணிந்திருந்த 4 சவரன் செயினை பறித்தனர்.
பத்மாவதி விழித்து கொண்டு கூச்சலிட்டுள்ளார். இருப்பினும் செயினை அறுத்துக் கொண்டு 4 பேரும் தப்பியோடினர்.
தகவலறிந்த வளவனுார் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
மோப்ப நாய், திருட்டு நடந்த வீட்டிலிருந்து ஒன்றரை கி.மீ., துாரம் ஓடிச் சென்று மெயின் ரோட்டில் நின்றது.
இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.