ADDED : ஆக 04, 2025 12:27 AM
அ நிறம் | அளவு
வானுார் : கொத்தனார் மயக்கம் அடைந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கிளியனுார் அடுத்த கொமடிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம், 50; கொத்தனார்.
கடந்த 1ம் தேதி சேதராப்பட்டு பகுதிக்கு வேலைக்கு சென்றார். பின் மாலை வீட்டிற்கு வந்தவருக்கு திடீரென அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக உப்புவேலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி காசியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
