/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் 3,972 குடிநீர் டேங்க்குகள் ஒரே நாளில் மாஸ் கிளினிங்: நகராட்சி, ஊராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்தனர்
/
மாவட்டத்தில் 3,972 குடிநீர் டேங்க்குகள் ஒரே நாளில் மாஸ் கிளினிங்: நகராட்சி, ஊராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்தனர்
மாவட்டத்தில் 3,972 குடிநீர் டேங்க்குகள் ஒரே நாளில் மாஸ் கிளினிங்: நகராட்சி, ஊராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்தனர்
மாவட்டத்தில் 3,972 குடிநீர் டேங்க்குகள் ஒரே நாளில் மாஸ் கிளினிங்: நகராட்சி, ஊராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்தனர்
ADDED : மே 15, 2024 11:37 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் உள்ள 3,972 குடிநீர் டேங்க்குகள் நேற்று ஒரே நாளில் மாஸ் கிளீனிங் திட்டத்தில் சுத்தம் செய்யும் பணி நடந்தது.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள ஓவர் டேங்க்குகள் முழுவதும் சுத்தம் செய்யவும், ஒட்டுமொத்த துாய்மை செய்யவும் கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காலை, மாவட்டத்தில் உள்ள 3,972 குடிநீர் டேங்க்குகளையும் சுத்தம் செய்யும் பணி துவங்கியது. கிராமங்கள், நகரங்களில் உள்ள ஓவர் டேங்க்குகளில் அதிகாலை தண்ணீர் ஏற்றுவது நிறுத்தப்பட்டு, டேங்க் துாய்மை பணி நடந்தது. டேங்க் உள்ளே இறங்கி அந்தந்த ஊராட்சி, நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்து, பாசி படிந்த கழிவுகள், மண் குவியல்களை அற்றினர்.
விழுப்புரம் நகராட்சி நரசிங்கபுரத்தில் உள்ள 6 லட்சம் லிட்டர் கொள்ளவுள்ள டேங்கில், நகராட்சி துாய்மைப்பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்தது. கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, வடிகால் வாரியத்தினர் மூலம், குடிநீரில் முறையான தாது உப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளதா, நீரின் அளவிற்கேற்ப குளோரினேஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது: பொது மக்களுக்கு துாய்மையான குடிநீர் வழங்கும் விதத்தில், 15 நாட்களுக்கு ஒருமுறை, அனைத்து நீர்த்தேக்க தொட்டிகளும் துாய்மை செய்யப்படும். ஒவ்வொரு முறையும் நீரேற்றம் செய்யும்போது குளோரினேஷன் செய்திடவும், குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக நீரின் தன்மை அறிவதற்கான கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதனை கையாள்வதற்கு ஊராட்சி செயலர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. நீரின் தன்மை அறிந்து, அவர்கள் பதிவேட்டில் பதிவு செய்திடவும், அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது, பதிவேட்டினை ஆய்வு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை சுத்தம் செய்யும்போது, ஜியோடேக் செய்து அதனை தங்களுடைய வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும். நீர்த்தேக்கத்தொட்டிகளில் துாய்மைப்பணிகள் மேற்கொண்டதன் ஆதாரமாக புதிய செயலி மூலம் புகைப்படங்கள் எடுத்து, சமர்ப்பித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அனைத்து குடிநீர் டேங்குகளின் படிக்கட்டுகளிலும், இனி பாதுகாப்பு கதவு போடப்படும். டேங்கின் மேற்புறங்களை மூடவும், அனைத்து குடிநீர் கிணறுகள் சுற்றிலும் பாதுகாப்பிற்காக வேலி அமைக்கவும் உத்தரவிட்டுள்ளோம்.
குடிநீர் தட்டுப்பாடுள்ள செஞ்சி, மேல்மலையனுார் பகுதிகளில் தேவையான இடங்களில் 10 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும். மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடில்லை என்றார். குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மோகன், நகராட்சி ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.