/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழங்குடியினர் வீடு கட்ட உத்தரவு மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்
/
பழங்குடியினர் வீடு கட்ட உத்தரவு மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்
பழங்குடியினர் வீடு கட்ட உத்தரவு மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்
பழங்குடியினர் வீடு கட்ட உத்தரவு மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : ஏப் 02, 2025 03:46 AM

செஞ்சி : வல்லம் ஒன்றிய அலுவலகத்தில், ஜன்மன் திட்டத்தில் பழங்குடியின மக்கள் தொகுப்பு வீடு கட்டுவதற்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய சேர்மேன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். சிவக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., உதயகுமார் வரவேற்றார். போந்தை, கீழ்வைலாமூர், ஓட்ட மண்டபம், கண்டமநல்லுார், சூர்ப்பந்தாங்கல் கிராமங்களைச் சேர்ந்த 27 பழங்குடியினருக்கு, ஒரு கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகளை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கினார்.
தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு நலவாரிய உறுப்பினர் சிவா, ஒன்றிய செயலாளர்கள் துரை, இளம்வழுதி, மாவட்ட கவுன்சிலர் அன்புச்செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், ஏ.பி.டி.ஓ.,க்கள் மணிகண்டன், சுந்தரபாண்டியன் பங்கேற்றனர்.
கிராம ஊராட்சி பி.டி.ஓ., இளங்கோவன் நன்றி கூறினார்.