/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிவில் சர்வீஸ் படிக்கும் மாணவிக்கு லேப்டாப்: மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்

ADDED : நவ 27, 2025 05:01 AM

செஞ்சி: சிவில் சர்வீஸ் படிப்பதற்கு லேப்டாப் வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கேட்ட மாணவிக்கு மஸ்தான் எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் லேப்டாப் வா ங்கி கொடுத்தார்.
செஞ்சி ஒன்றியம் மேல் எடையாளம் ஊராட்சியில் கடந்த அக். 11ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் மஸ்தான் எம்.எல்.ஏ., கலந்து கொண்டார்.அந்த கூட்டத்தில் பேசிய பி.ஏ., படித்துள்ள பட்டதாரி மாணவியான அம்சா 20, நான் முதல்வன் திட்டத்தில் நான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்து வருகிறேன்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க லேப்டாப் அவசியமானதாக உள்ளது. எனது தந்தை சாமிநாதன் விவசாய வேலை செய்து வருவதால் லேப்டாப் வாங்க முடியவில்லை. என்னை போல் ஏராளமானவர்கள் உள்ளனர்.
இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கேட்டு கொண்டார்.
இதையடுத்து மஸ்தான் எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான புதிய லேப்டாப்பை மாணவி அம்சாவிற்கு நேற்று வழங்கினார்.
நன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, தொண்டரணி பாஷா , குப்புசாமி, ரோமியன், பிரபு, ஹாஜி, பிரபா ஆகியோர் உடன் இருந்தனர்.
லேப்டாப்பை பெற்றுக் கொண்ட மாணவி அம்சா, முதல்வர் ஸ்டாலின், மஸ்தான் எம்.எல்.ஏ., ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.