/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
2.5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் மஸ்தான் எம்.எல்.ஏ., பேச்சு

ADDED : ஜூன் 23, 2025 04:54 AM

செஞ்சி : 'விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., வினர் புதிதாக 2.5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்' என மஸ்தான்எம்.எல்.ஏ., பேசினார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு தலைப்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட அவைத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர்கள் செஞ்சி கார்த்திகேயன், மயிலம் புகழேந்தி, செயற்குழு உறுப்பினர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர்.
செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., பேசுகையில், 'வரும் சட்ட சபை தேர்தலில் தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் உறுதிமொழியேற்க வேண்டும். விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் 2.5 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்' என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், செந்தமிழ் செல்வன், தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் பங்கேற்றனர்.