/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாதர் சம்மேளன மாவட்ட குழு கூட்டம்
/
மாதர் சம்மேளன மாவட்ட குழு கூட்டம்
ADDED : ஏப் 07, 2025 06:45 AM
விழுப்புரம்; இந்திய மாதர் சம்மேளனம் விழுப்புரம் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் திலகவதி தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் கண்ணகி, பெண்கள் உரிமை கள் பற்றியும், பெண்களுக்கான அரசியல் பற்றியும் கூறினார். துணைச் செயலாளர் வளர்மதி, சங்க செயல்பாடு, வளர்ச்சி பற்றி பேசினார். மாவட்ட செயலாளர் பூங்கொடி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான வன்கொடு மைகள், பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி கூறினார்.
கூட்டத்தில், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கண்டிப்பது. பெண்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தாலுகா தலைநகரில் பெண்களுக்கான மகளிர் அரசு அறிவியல் கலை கல்லுாரி துவங்க வேண்டும்.
கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். நுாறுநாள் பணியை 200 நாட்களாக உயர்த்தி 700 ரூபாய் கூலி வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி வரும் மே 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை மாவட்டம் முழுதும் வேன் பிரசாரம் செய்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

