UPDATED : நவ 17, 2026 08:03 PM
ADDED : நவ 17, 2026 08:00 PM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் இலக்கியா தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் மேரி, மாவட்ட துணை செயலாளர் சித்ரா கண்டன உரையாற்றினர். இதில், கள்ளக்குறிச்சி த.வெ.க., எம்.எல்.ஏ.,வை உடனடியாக கைது செய்யகோரியும், செஞ்சி 7 வயது சிறுமியை உடனடியாக கண்டுபிடிக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, மாவட்ட குழு உறுப்பினர் நீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
