ADDED : செப் 17, 2026 05:33 PM
திண்டிவனம்: மயிலம் சட்டசபை தொகுதியை சேர்ந்த வல்லத்தில் எம்.எல்.ஏ., அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
மயிலம் தொகுதி, வல்லம் பி.டி.ஓ.,அலுவலக வளாகத்தில் அந்த தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை தொகுதி எம்.எல்.ஏ.,சண்முகம், நேற்று காலை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
விழாவில் நியூஸ் ஜெ.,நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன், திண்டிவனம் முன்னாள் எம்.எல்.ஏ.,அர்ஜூனன், மயிலம் ஒன்றிய முன்னாள் செயலாளர் வல்லம் விநாயகமூர்த்தி, மேற்கு ஒன்றியம் புலியனுார் விஜயன், வல்லம் தெற்கு நடராஜன், ஒலக்கூர் மேற்கு கிருஷ்ணமூர்த்தி, திண்டிவனம் முன்னாள் நகர செயலாளர் ரூபன்ராஜ், வல்லம் அரசு ஒப்பந்ததாரர் ஸ்ரீதர், முன்னாள் மாநில ஜெ.,பேரவை துணை செயலாளர் பாலசுந்தரம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, கண்ணன், முன்னாள் மாவட்ட இணை செயலாளர் ஆனந்தி, திண்டிவனம் முன்னாள் சேர்மன் வெங்கடேசன், துணை தலைவர் முகமதுெஷரீப், விழுப்புரம் நிர்வாகிகள் மின்னல்சவுக், கிருஷ்ணன், நீலமேகம்,அருண்குமார், கவுன்சிலர் ராதிகா, வழக்கறிஞர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
