மயிலம் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
மயிலம் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 07, 2026 07:26 PM

திண்டிவனம்: 'ஸ்டாலின் மீண்டும் முதல்வரானால், வரும் ஜூன் மாதம் முதல் உதவி தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்குவார்' என தே.மு.தி.க., வேட்பாளர் வெங்கடேசன் பேசினார்.
மயிலம் தொகுதியில் நேற்று காலை வல்லம் தெற்கு ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டபோது பேசுகையில், 'ஸ்டாலின் மீண்டும் முதல்வரானால், வரும் ஜூன் மாதம் முதல் உதவி தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாய் பெற வேண்டுமென்றால் நீங்கள் தி.மு.க.,கூட்டணி வேட்பாளரான எனக்கு முரசு சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். விடியல் பயணத்தில் மகளிர்க்கு கட்டணமில்லா பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுத்த ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவதற்கு நீங்கள் எனக்கு ஆதரவு தர வேண்டும்' என்றார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,அவைத் தலைவர் சேகர், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, வல்லம் தெற்கு ஒன்றிய செயலாளர் துரை, தே.மு.தி.க.,மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரேசன், ஒன்றிய செயலாளர் பாலசுந்தர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளான பங்கேற்றனர்.
