ADDED : டிச 20, 2025 07:02 AM

விழுப்புரம்: மயிலம் பொறியியல் கல்லுாரியில் தமிழ்த் துறை சார்பில் முப்பெரும் விழா 'பாரதி விழா 2025' தலைப்பில் நடந்தது.
பொறியியல் மாணவர்கள், உலக சாதனையாக கவிதை தொகுப்பு வெளியீடு, அச்சுவர் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு மற்றும் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா கல்லுாரியில் நடந்தது.
மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். மயிலம் கல்விக்குழுமம் இயக்குனர் செந்தில் முதன்மை உரையாற்றினார். முதல்வர் ராஜப்பன் வரவேற்றார்.
முன்னதாக, புதுச்சேரி, திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பான அச்சுவர்ஸ் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனர் சரவணன், நோக்கவுரையாற்றினார். புதுச்சேரி, அரசு கலைப்பண்பாட்டு துறை மேலாண் இயக்குநர் கலியபெருமாள் சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம், அன்னியூர் அரசு கலை கல்லுாரி முதல்வர் அசோகன், புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் நிறுவன தலைவர் ஆறு செல்வம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் வாசுதேவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் ரகுராமன் உட்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
தமிழ்த் துறை தலைவர் திவ்யா நன்றி கூறினார்.
