/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் சார் - பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
/
மயிலம் சார் - பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
மயிலம் சார் - பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
மயிலம் சார் - பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
ADDED : நவ 09, 2024 02:27 AM

திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டம், மயிலம் சார் --- பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 6:30 மணியிலிருந்து இரவு 8:15 மணி வரை, டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
அதில், கணக்கில் வராத பணம் 1.20 லட்சம் ரூபாய் மற்றும் சில ஆவணங்கள் சிக்கின. இதுதொடர்பாக, சார் - பதிவாளர் வெங்கடேஸ்வரியிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று காலை 7:00 மணிக்கு, திண்டிவனம், ஜெயபுரம் மூன்றாவது தெருவில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசிக்கும் சார் - பதிவாளர் வெங்கடேஸ்வரி வீட்டில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், நேற்று மதியம் சோதனை நடத்தினர். 6 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.