/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செயற்கை கால், கை வழங்க 27ம் தேதி அளவீடு முகாம்
/
செயற்கை கால், கை வழங்க 27ம் தேதி அளவீடு முகாம்
ADDED : டிச 25, 2024 06:26 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில், நவீன செயற்கை கால் மற்றும் செயற்கை கை இலவசமாக வழங்கும் திட்ட அளவீடு சிறப்பு முகாம் 27ம் தேதி நடக்கிறது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ், கால் மற்றும் கை துண்டிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, சர்வதேச தரம் வாய்ந்த அதிநவீன செயற்கை கால், கை செய்து வழங்கும் திட்டத்தில், அளவு எடுக்கும் முகாம் வரும் 27ம் தேதி காலை 10.00 மணிக்கு, கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடக்கிறது.
முதல் முறையாக நடைபெறும் இந்த முகாமில், சென்னையிலிருந்து வரும் சிறப்பு முட நீக்கவியல் வல்லுனர்கள் அளவு எடுக்கவுள்ளனர்.
கால் மற்றும் கை துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்களின் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை நகல் மற்றும் அசலுடன் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் தகவலுக்கு செல்: 8438736944 என்ற எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.
வாட்ஸ் அப் மூலமாகவும் பதிவு செய்து 27ம் தேதி முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

