
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரத்தில் மகளிர் தின விழாவை முன்னிட்டு, மருத்துவ முகாம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மக்கள் உரிமைகள் கழக மாநில முதன்மைச் செயலாளர் கந்தன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட ஜெ.ஆர்.சி., தலைவர் திருமாவளவன், லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா, சிவக்குமார் முன்னிலை வகித்தனர். ஜோதி வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் பிரியா பத்மாசினி தலைமையில், டாக்டர்கள் கோவிந்தராஜ், கோபிநாத், வெங்கடேஷ், பஷீர், செல்வராஜ், சிவராஜ் மற்றும் மகாராஜபுரம் ஆரம்ப சுகதார நிலைய செவிலியர்கள் அடங்கிய குழுவினர், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர்.
முகாம் ஏற்பாடுகளை அருட்தந்தை ஆரோக்கியதாஸ், வெங்கடேசன், வைத்தியநாதன், கணேஷ், சரவணன், சுகுமார், தினகரன், சசிகலா, பவுலின், தேவி, வனிதா ஆகியோர் செய்திருந்தனர்.