ADDED : ஆக 23, 2026 03:20 PM
திண்டிவனம்: திண்டிவனத்தில், ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், சென்னை அப்பல்லோ மருத்துவமனை, திண்டிவனம் பி.என்.ஆர்.துணிக்கடை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு லயன்ஸ் சங்க தலைவர் ஐங்கரன் சிவக்குமார் தலைமை தாங்கினார் மண்டல தலைவர் சஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் நிவேதிதா ராஜேந்திரன், வெங்கடேசன், ராமமூர்த்தி, பிரபாகரன், சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர்கள் லோகநாதன், பாலாஜி வரவேற்றனர்.
சங்க மாவட்ட தலைவர் சுந்தரம், பி.என்.ஆர்.சில்க்ஸ் சரவணன் மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்.
அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் பிரசாத், பிரசன்னா ஆகியோர் தலைமையிலான குழுவினர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.
சங்க நிர்வாக அலுவலர் கார்த்திக் கருணாகரன், அப்பல்லோ மருத்துவமனை முகாம் அமைப்பாளர் சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
