ADDED : ஜூன் 28, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மண்டல தலைமை அலுவலகத்தில் நடந்த முகாமை, மேலாண் இயக்குநர் குணசேகரன் துவக்கி வைத்தார்.
அரசு போக்குவரத்துக் டிரைவர்கள், கண்டக்டர்கள், பணியாளர்கள் 450 பேர் கலந்து கொண்டனர்.
கண் மருத்துவம் மற்றும் பொதுநல மருத்துவ பரிசோதனைகள் செய்து, ஆலோசனை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் ஜெயசங்கர், துணை மேலாளர் நடடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

