/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டெக்டர் காலில் தவறான ஆபரேஷன் மருத்துவ குழு விசாரணை தீவிரம்
/
கண்டெக்டர் காலில் தவறான ஆபரேஷன் மருத்துவ குழு விசாரணை தீவிரம்
கண்டெக்டர் காலில் தவறான ஆபரேஷன் மருத்துவ குழு விசாரணை தீவிரம்
கண்டெக்டர் காலில் தவறான ஆபரேஷன் மருத்துவ குழு விசாரணை தீவிரம்
ADDED : ஜூலை 06, 2025 04:36 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பஸ் கண்டெக்டர் காலில் தவறாக ஆபரேஷன் செய்த டாக்டர் மற்றும் பணியாளர்களிடம் மருத்துவ குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் மாரிமுத்து,46; தனியார் பஸ் கண்டெக்டர். இவர் வலது காலில் அதிக வீக்கம் ஏற்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவருக்கு காலில் இரு இடங்களில் ஜவ்வு கிழிந்ததால், நேற்று முன்தினம் அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக, டாக்டர்கள் இடது காலில் அறுவை சிகிச்சை செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட டாக்டர், மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை செய்தனர்.
மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு கூறியதாவது:
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இருந்து எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை டாக்டர்கள், 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை செய்த டாக்டர், ஆபரேஷன் தியேட்டரில் இருந்த செவிலியர்கள், பணியாளர்களிடம் விசாரணை நடக்கிறது.
விசாரணை ஓரிரு நாளில் முடித்து அறிக்கை சமர்பிக்க மருத்துவகுழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை அடிப்படையில், சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், அறுவை சிகிச்சை செய்த சம்பந்தப்பட்ட டாக்டரிடம் தனிப்பட்ட முறையிலும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.