/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் கோர்ட் உத்தரவால் நாளை மறுநாள் திறப்பு

ADDED : மார் 20, 2024 05:34 AM

அதனையொட்டி  நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. எஸ்.பி., தீபக்சிவாச், ஆர்.டி.ஓ., காஜாஷாகுல்அமீது, டி.எஸ்.பி., சுரேஷ், அறநிலையத்துறை அதிகாரி சிவக்குமார், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில், இருதரப்பு பிரதிநிதிகளிடம் கோர்ட் உத்தரவை எடுத்து கூறினர்.
இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'ஐகோர்ட் உத்தரவின்படி, வரும் 22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்கு கோவிலை திறந்து, அறநிலையத்துறை நியமிக்கும் நபர் மூலம், தினசரி பூஜை மட்டும் நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
கோவில் பகுதியில் தடை உத்தரவு தொடர்வதால், பொதுமக்கள் வழிபட அனுமதியில்லை. தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு போடப்படும்' என்றனர்.