ADDED : ஜூலை 08, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த நெய்குப்பி கிராமத்தில் தொழிலாளர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நடந்த முகாமிற்கு, ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணைச் சேர்மன் ராஜாராம் தலைமை தாங்கினர். தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலன் மற்றும் சமூக பாதுகாப்பு நல வாரிய உறுப்பினர் சிவா, பொது மக்களுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கி பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், ஊராட்சி தலைவர் சுதா, மாவட்ட கவுன்சிலர்கள் மனோசித்ரா, மகேஸ்வரி, ஒலக்கூர் ஒன்றிய தி.மு.க., துணைச் செயலாளர் காளி, ஒன்றிய கவுன்சிலர் விஜயபாஸ்கர், திருஞானம், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் ேஹமநாதன் பங்கேற்றனர்.