/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தெய்வானை கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
தெய்வானை கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜூலை 10, 2025 09:35 PM

விழுப்புரம்; விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், வணிகவியல் ஆராய்ச்சி துறை புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு நடந்தது.
தெய்வானை ஆம்மாள் மகளிர் கல்லுாரியின் வணிகவியல் ஆராய்ச்சி துறை சார்பில், கோயம்புத்தூரை சேர்ந்த கரம்ஸ் ஐ-டெக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் கல்லுாரி முதல்வர் அகிலா மற்றும் கரம்ஸ் ஐ-டெக் நிறுவன நிறுவனர் ஜோயல் ஆண்ட்ரூ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், டேலி பிரைம் 6.0 மென்பொருளில் பயிற்சி நெறிமுறைகளை, கல்லுாரி மாணவிகளுக்கு வழங்கும். மாணவிகளுக்கு மதிப்பு கூட்டுப் பயிற்சிகள், மாணவியர் திட்டங்கள், இன்டர்ன்ஷிப்கள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் ஆராய்ச்சிகள் போன்றவற்றின் வாயிலாக தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்த நிகழ்வு குறித்து விளக்கவுரை நடந்தது.
ஜோயல் ஆண்ட்ரூ விவரித்தார். வணிகவியல் துறை மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.