நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் மா.கம்யூ., மூத்த தலைவர் மறைந்த சீத்தாராம் யெச்சூரி நினைவேந்தல் கூட்டம் நடந்தது.
முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் சார்பில் மா.கம்யூ., தலைவர் சீதாராம் யெச்சூரி நினைவேந்தல் கூட்டம் மற்றும் அவரது நினைவாக எழுதப்பட்ட இளைஞர் முழக்கத்தின் நினைவிதழ் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
மா.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கார்க்கி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ரவிக்குமார் எம்.பி., சீத்தாராம் யெச்சூரி படத்துக்கு அஞ்சலி செலுத்தி, நினைவேந்தல் உரையாற்றினார்.
மருதம் பண்பாட்டு அமைப்பு ரவிகார்த்திகேயன், பாபு, முத்துவேல் ராமமூர்த்தி, கரிகாலன் பசுமை மீட்பு படை அகிலன், மோகனசுந்தரம், முத்துராசாகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.