ADDED : மே 16, 2025 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : புதுச்சேரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி அருகேயுள்ள தமிழகப்பகுதியான கலைவாணர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பிரவீன்குமார், 38; மன நலம் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 13ம் தேதி இரவு வீட்டின் அறையில் தூங்க சென்றுள்ளார். மீண்டும் மறுநாள் வெகுநேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை.
இதில் சந்தேகமடைந்த அவரது தாய் அங்காளம்மாள், கதவை உடைத்து சென்று பார்த்த போது, பிரவீன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. தகவலறிந்த ஆரோவில் போலீசார் உடலை மீட்டு புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.