ADDED : ஏப் 16, 2026 06:09 PM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கணினி அறையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு நுண் பார்வையாளர்கள் இரண்டாம் கட்ட தற்செயல் தேர்வு முறையில், தேர்வு செய்யும் பணி நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். தேர்தல் பொது பார்வையாளர்கள் ஷாலினி பண்டிட், பாவ் சாஹேப் தாங்கடே, ஓம் பிரகாஷ் வர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வரும் 23ம் தேதி நடைபெற உள்ள தேர்தலையொட்டி, மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிக்கு 52 நுண் பார்வையாளர்கள் இரண்டாம் கட்ட தற்செயல் தேர்வு முறையில் தேர்வு செய்யும் பணி நடந்தது.
டி.ஆர்.ஓ., அரிதாஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
