ADDED : ஆக 12, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: கண்டாச்சிபுரம் குறு மைய அளவிலான கோ–கோ போட்டியில் போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த குறு மைய விளையாட்டு போட்டியில் அப்பள்ளி மாணவர்கள் 14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவிற்கான, கோ–கோ போட்டியில் மாணவர்கள் பங்கேற்று முதலிடம் பிடித்தனர்.கடந்த ஐந்து ஆண்டுகளாக, அதே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் அய்யனார்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேகர் , உடற்கல்வி ஆசிரியர்கள்சுபாஷ், விமல் ராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
