/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் 36 பேருக்கு மினி பஸ் ஆணை வழங்கல்
/
திண்டிவனத்தில் 36 பேருக்கு மினி பஸ் ஆணை வழங்கல்
ADDED : மார் 28, 2025 05:20 AM

திண்டிவனம் : திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 36 பேருக்கு மினி பஸ் வழித்தடங்களுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதல் அமைச்சரின் மினி பஸ் விரிவான திட்டத்தின் கீழ், திண்டிவனம், செஞ்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில், மினி பஸ் வழித்தடங்களுக்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 14 மாற்றியமைக்கப்பட்ட வழித்தடங்களில், 11 வழித்தடங்களில் ஒற்றை விண்ணப்பதாரர்களும், ஒரு வழித்தடத்தில் மட்டும் குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு நடந்தது.
இதில் தேர்வு செய்யப்பட்ட 36 பேருக்கு திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் வழித்தடங்களுக்கான ஆணையை வழங்கி, வரும் மே மாதம் 1ம் தேதியிலிருந்து மினி பஸ்களை இயக்குவதற்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.