ADDED : ஜூலை 05, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சியில் இருந்து தாண்டவசமுத்திரம் கிராமத்திற்கு 'மினி'பஸ் சேவை துவங்கியது.
செஞ்சியில் இருந்து கோணை, தச்சம்பட்டு, நெல்லிமலை வழியாக தாண்டவசமுத்திரம் கிராமத்திற்கு 'மினி' பஸ் சேவை துவக்க விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பெரிய பள்ளிவாசல் தலைவர் சையத் மஜித் பாபு முன்னிலை வகித்தனர்.
மஸ்தான் எம்.எல்.ஏ., கொடியசைத்து 'மினி' பஸ் சேவையை துவக்கிவைத்தார்.
இதில் நகை அடகு வியாபாரிகள் சங்க தலைவர் ஆதில் பாஷா, வர்த்தகர் சங்கம் அம்ஜத் பாண்டே, பேரூராட்சி கவுன்சிலர் ஜான்பாஷா, தி.மு.க. அவைத்தலைவர் வாசு, தொண்டரணி பாஷா, சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.