ADDED : மார் 02, 2024 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம், ஜக்காம்பேட்டை கோர்ட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ராமநாதபுரம் மாவட்டம், வலசை பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 32; இவர், பாம்பன் பகுதியில் இருந்து வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை 8:45 மணிக்கு சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மயிலம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே வந்தபோது, பின்னால் வந்த ஆம்னி பஸ் மினி லாரியை உரசுவது போல் வந்தது. இதில் நிலை தடுமாறிய லாரி சாலை அபிவிருத்திக்காக கொட்டப்பட்டுள்ள மண்ணில் சிக்கி கவிழ்ந்தது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

