/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மினி பஸ் ஆணை பெற்றவர்கள் விரைந்து இயக்க அறிவுறுத்தல்
/
மினி பஸ் ஆணை பெற்றவர்கள் விரைந்து இயக்க அறிவுறுத்தல்
மினி பஸ் ஆணை பெற்றவர்கள் விரைந்து இயக்க அறிவுறுத்தல்
மினி பஸ் ஆணை பெற்றவர்கள் விரைந்து இயக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 04, 2025 02:10 AM
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மினி பஸ் திட்டத்தின்கீழ் செயல்முறை ஆணை பெற்றவர்கள் சேவையினை விரைந்து துவங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். பின், அவர் பேசுகையில், தமிழக அரசின் விரிவான மினி பஸ் திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் 109 வழித்தடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு செயல்முறை ஆணை வழங்கப்பட்டது. கடந்த 16ம் தேதி மாவட்டத்தில் 26 மினி பஸ்கள் துவக்கி வைக்கப்பட்டது.
செயல்முறை ஆணை பெற்று பஸ் சேவை துவங்காத நபர்கள் உடனடியாக அந்தந்த வழித்தடத்தில் வாகனங்கள் இயக்க வேண்டும். மாவட்ட தொழில் மையம், அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் வங்கி விதிமுறைகளுக்குட்பட்டு மினி பஸ் வாங்குவதற்கான வங்கிக் கடனுதவிகளை வழங்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆர்.டி.ஓ., அருணாச்சலம் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.