/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுாரில் இருந்து சென்னைக்கு புதிய பஸ் அமைச்சர் துவக்கி வைத்தார்

ADDED : ஜன 25, 2024 05:55 AM

செஞ்சி : செஞ்சி வழியாக மேல்மலையனுாரில் இருந்து புதிய வழி தடத்தில் சென்னைக்கு பஸ் வசதியை அமைச்சர் மஸ்தான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேல்மலையனுாரில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு தொரப்பாடி, வடபாலை, செவலபுரை, செஞ்சி வழியாக புதிய வழி தடத்தில் பஸ் வசதி துவக்க விழா நேற்று செஞ்சி பஸ் நிலையத்தில் நடந்தது.
அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட துணை மேலாளர் இயக்கம் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
செஞ்சி பேரூராட்சித் தலைவர் மொக்தியார் முன்னிலை வகித்தார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் புதிய பஸ் இயக்கத்தை கொடியசைத்து.துவக்கி வைத்து இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பணிமணை மேலாளர் சுரேஷ், நகர செயலாளர் கார்த்திக், தொ.மு.ச., பொதுச் செயலாளர் லூர்து இமானுவேல், நிர்வாகிகள் ஹரி கிருஷ்ணன், தியாகராஜன், காதர் நவாஸ், தமிழ்மணி, ராஜேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர் சீனிவாசன், லட்சுமி வெங்கடேசன் வர்தகர் சங்க பொருளாளர் அம்ஜத் பாண்டே, தொண்டரணி பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.