/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செங்கல்ராயன் சர்க்கரை ஆலையில் அரவை: அமைச்சர் துவக்கி வைப்பு
/
செங்கல்ராயன் சர்க்கரை ஆலையில் அரவை: அமைச்சர் துவக்கி வைப்பு
செங்கல்ராயன் சர்க்கரை ஆலையில் அரவை: அமைச்சர் துவக்கி வைப்பு
செங்கல்ராயன் சர்க்கரை ஆலையில் அரவை: அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : டிச 26, 2024 06:24 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய் நல்லுார் அருகே உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024--25 ஆண்டிற்கான அரவைப் பருவத்தை அமைச்சர் பொன்முடி நேற்று துவக்கி வைத்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரிய சேவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024--25 ஆண்டிற்கான அரவை பருவம் துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் முத்து மீனாட்சி வரவேற்றார். விழாவில் அமைச்சர் பொன்முடி அரவை பருவத்தை துவக்கி வைத்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மேன் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், சந்திரசேகரன், ஒன்றிய சேர் மேன் ஓம் சிவ சக்தி வேல், ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், பெரிய சேவலை ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன், தாசில்தார் செந்தில்குமார், கரும்பு அலுவலர் முருகேசன் உட்பட பல பங்கேற்றனர்.