/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.49.50 லட்சம் மதிப்பில் கோவில் குளம்: அமைச்சர் திறந்து வைப்பு
/
ரூ.49.50 லட்சம் மதிப்பில் கோவில் குளம்: அமைச்சர் திறந்து வைப்பு
ரூ.49.50 லட்சம் மதிப்பில் கோவில் குளம்: அமைச்சர் திறந்து வைப்பு
ரூ.49.50 லட்சம் மதிப்பில் கோவில் குளம்: அமைச்சர் திறந்து வைப்பு
ADDED : டிச 27, 2024 06:56 AM

திருவெண்ணெய் நல்லுார்: திருவெண்ணெய் நல்லுார் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அல்லா சாமி குளம் மற்றும் சிறுவர் பூங்கா திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் விஸ்வநாதன், சந்திரசேகரன், ஒன்றிய சேர்மேன் ஓம் சிவசக்தி வேல் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சித் தலைவர் அஞ்சுகம் கணேசன் வரவேற்றார். அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அல்லா சாமி குளம் மற்றும் சிறுவர் பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் கணேசன், பேரூராட்சித் துணைத் சேர்மேன் ஜோதி,பேரூராட்சி செயலாளர்கள் முரளி, இளநிலை உதவியாளர் பாலமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ், வார்டு கவுன்சிலர் செந்தில் முருகன், பாபு மற்றும் நிர்வாகிகள் சரவணகுமார், சதாம், சுலைமான் உட்பட பலர் பங்கேற்றனர்.