/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர் ஆய்வு
/
புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர் ஆய்வு
ADDED : டிச 06, 2024 05:04 AM
விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சியில் பெஞ்சல் புயலால் பாதித்த பகுதிகளை அமைச்சர் பொன்முடி நேற்று பார்வையிட்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்தி, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளோருக்கு மதிய உணவு வழங்கினார்.
தொடர் கனமழை பெய்ததால் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சியில் குடியிருப்புகளில் ஏற்பட்ட பாதிப்புகள், சாலை, மின்கம்பங்கள் பாதிப்பு, கால்நடை உயிரிழப்பு, விளை நிலங்கள் பாதிப்பு குறித்து அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்து இங்குள்ள மக்களிடம் பாதிப்புகள் குறித்தும், தேவைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
மழை பாதித்த பகுதிகளில் மீட்பு, சீரமைப்பு பணிகளை விரைந்து செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முறையாக கணக்கீடு செய்து நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு, அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், அத்தியவாசிய உணவு பொருட்களையும், மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், சான்றிதழ்களை விரைந்து வழங்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
திருவெண்ணெய்நல்லுார் ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் விஸ்வநாதன் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்,