/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் மஸ்தான் நலத்திட்ட உதவி வழங்கல்

ADDED : பிப் 17, 2024 05:37 AM

மரக்காணம்: மரக்காணத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
திண்டினம் சப் கலெக்டர் திவ்யான்ஷி நிகாம் முன்னிலை வகித்தார். தாசில்தார் பாலமுருகன் வரவேற்றார்.
விழாவில், 401 பயனாளிகளுக்கு 27.46 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மஸ்தான் வழங்கிப் பேசுகையில், ''மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் முக்கிய நோக்கம், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று 30 நாட்களுக்குள்ளாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்பதே ஆகும்.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து 2,946 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதில் 536 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 35 மனுக்கள் நிலுவையில் உள்ளன. 2,375 மனுக்கள் மீது அரசு உத்திரவாதம் வழங்கப்பட்டு இன்று 401 பயனாளிகளுக்கு 27 லட்சத்து 46 ஆயிரத்து 221 ரூபாய்- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன' என்றார்.
ஒன்றிய சேர்மன் தயாளன், பேரூராட்சி சேர்மன் வேதநாயகி ஆளவந்தார், தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, தாட்கோ மாவட்ட மேலாளர் தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.