/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுபான்மையினர் துறை நலத்திட்ட உதவி வழங்கல்
/
சிறுபான்மையினர் துறை நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஜூன் 06, 2025 06:54 AM

விக்கிரவாண்டி; விழுப்புரம் மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மகளிர் குழுவினருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
விக்கிரவாண்டி சாம்ஸ் வளாகத்தில் நடந்த விழாவிற்கு எம் .எல். ஏ., அன்னி யூர் சிவா, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்க கவுரவ செயலாளர் சோபியா லாரன்ஸ் வரவேற்றார்.
விழாவிற்கு முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க மகளிர் குழு வினருக்கு ரூபாய் 16 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
சிறுபான்மை நலத்துறை உதவி கணக்கு அலுவலர் பிரகாஷ்,சாம்ஸ் இயக்குனர் மெசையா, பங்குதந்தை அற்புதராஜ், மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம், பேரூராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ், சுபா, பிரியா பூபாலன், நகரச் செயலாளர் நைனா முகமது, வழக்கறிஞர் சுரேஷ் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த மகளிர் குழுவினர் பலர் பங்கேற்றனர்.