தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காணாமல் போன முதியவர் கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு

காணாமல் போன முதியவர் கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு

காணாமல் போன முதியவர் கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு


ADDED : மார் 30, 2025 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2025 03:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே காணாமல் போன முதியவர் உடல் கிணற்றிலிருந்து போலீசார் மீட்டனர்.

அவலுார்பேட்டை அடுத்த மேல்செவலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம், 75; இவர் கடந்த 24ம் தேதி காலை வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மகன் தாமோதரன், 55; அளித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நந்திபுரம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us