தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காணாமல் போன முதியவர் ஏரியில் சடலமாக மீட்பு

 காணாமல் போன முதியவர் ஏரியில் சடலமாக மீட்பு

 காணாமல் போன முதியவர் ஏரியில் சடலமாக மீட்பு


ADDED : ஜன 31, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வானுார்: கிளியனுார் அருகே காணாமல் போன முதியவரின் உடலை ஏரியில் இருந்து, போலீசார் சடலமாக மீட்டனர்.

வானுார் அடுத்த எறையானுார் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன், 70; இவர் கடந்த 27ம் தேதி ரேஷன் கடைக்கு சென்று கைரேகை சரியாக பதிவாகாததால் வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வழியில் இயற்கை உபாதை கழிக்க அப்பகுதியில் உள்ள ஏரிக்குச் சென்றார்.

இந்நிலையில் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் மகன் கிருஷ்ணமூர்த்தி, கிளியனுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து முருகேசனை தேடினர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி இறந்த நிலையில் அவரது உடல் மிதந்துள்ளது.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று முருகேசன் உடலை மீட்டனர். இற்கை உபாதை கழித்து விட்டு, தண்ணீரில் இறங்கிய போது, தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us