தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/காணாமல் போன முதியவர் சடலமாக கண்டெடுப்பு

காணாமல் போன முதியவர் சடலமாக கண்டெடுப்பு

காணாமல் போன முதியவர் சடலமாக கண்டெடுப்பு


ADDED : நவ 25, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 08:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: திண்டிவனம் அருகே காணாமல் போன முதியவர் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

திண்டிவனம் அருகே ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி,80; மனநலம் பாதித்தவர். இவரை நேற்று (நவ.,24) இரவு வழக்கம் போல குடும்பத்தினர் சாப்பாடு வழங்க தேடிய போது, அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இன்று (நவ.,25) மாலை ஊரல் கிராமத்தில் உள்ள தரை கிணற்றில் ஒரு முதியவர் சடலமாக கிடைப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து, தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரிசெல்வம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் சுப்பிரமணி என்பது உறுதியாகியது. ரோஷனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us