/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செக் மோசடி வழக்கு எம்.எல்.ஏ., கோர்ட்டில் ஆஜர்
/
செக் மோசடி வழக்கு எம்.எல்.ஏ., கோர்ட்டில் ஆஜர்
ADDED : நவ 08, 2024 06:41 AM
விழுப்புரம்: விழுப்புரம், சிங்காரதோப்பைச் சேர்ந்தவர் ரங்கநாதன். டாக்டர். இவரிடம், கடந்த 2021ம் ஆண்டு 5 தவணைகளாக தேர்தல் செலவிற்காக, தற்போதைய விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ.,வான லட்சுமணன், காசோலைகள் கொடுத்து ரூ.2.5 கோடி கடன் வாங்கினார்.
அந்த காசோலையை கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி ரங்கநாதன், வங்கியில் செலுத்தினார். காசோலை பணமின்றி திரும்பியது.
அதன்பேரில் ரங்கநாதன், விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட் 1ல், லட்சுமணன் எம்.எல்.ஏ., மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணைக்கு ஆஜரான லட்சுமணன் எம்.எல்.ஏ., விடம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் ராதிகா உத்தரவிட்டார்.