/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம், ரெட்டணை பேரூராட்சியாக அறிவிக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
/
மயிலம், ரெட்டணை பேரூராட்சியாக அறிவிக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
மயிலம், ரெட்டணை பேரூராட்சியாக அறிவிக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
மயிலம், ரெட்டணை பேரூராட்சியாக அறிவிக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஜன 23, 2026 06:07 AM

மயிலம்: மயிலம் தொகுதியில் உள்ள ரெட்டணை, மயிலம் ஊராட்சிகளை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டுமென சட்டசபையில் பா.ம.க., எம்.எல்.ஏ., சிவக்குமார் கோரிக்கை விடுத்து பேசினார்.
சட்டசபையில் அவர் பேசுகையில், 'மயிலம் தொகுதியில் நகராட்சி, பேரூராட்சி எதுவும் இல்லை.
எனவே மயிலம், ரெட்டணை ஊராட்சிகளை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும்' என்றார்.
இதற்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு பதில் அளிக்கையில், 'ஊராட்சி பகுதி களை பேரூராட்சி, நகராட்சியாக மாற்றுவதற்கு கிராம ங்களில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் ஒப்புதல் பெற்று இதற்கான ஒதுக்கப்பட்டுள்ள கமிட்டியின் மூலம் ஊராட்சிகளை நகராட்சியாக, பேரூராட்சியாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.