/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு தேடி ரேஷன் பொருட்கள் எம்.எல்.ஏ., வினியோகம்
/
வீடு தேடி ரேஷன் பொருட்கள் எம்.எல்.ஏ., வினியோகம்
ADDED : ஆக 12, 2025 11:09 PM

விக்கிரவாண்டி,: முண்டியம்பாக்கத்தில் தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டன.
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, கூட்டுறவு துணை பதிவாளர் சரண்யா, சார்பதிவாளர் மணிமொழி, தாசில்தார் செல்வமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ், பி.டி.ஓ.,க்கள் சையது முகமது, நாராயணன், வங்கி செயலாளர் வெள்ளியங்கிரி, வருவாய் ஆய்வாளர்கள் தமிழரசன்,தயாநிதி , மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசிஜெயபால், செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், வேம்பி ரவி,ஒன்றிய தலைவர் முரளி ,ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், துணை தலைவர் தினேஷ், மாவட்ட பிரதிநிதிகள் அசோக் குமார்,சுதாகர், விஜயவேலன்,லட்சுமி நாராயணன், சங்கர்,ராம்குமார்,மகேஸ்வரி, ஊராட்சி செயலாளர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.