/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மகளிர் பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
அரசு மகளிர் பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : நவ 08, 2024 11:05 PM

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்டு, அதன் நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ஒரு வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியை பாடம் நடத்துவதை பார்வையிட்டார்.
பின், ஆசிரியர் நடத்திய பாடம் எந்தளவிற்கு புரிந்தது, என மாணவிகளிடம் விளக்கும்படி கூறினார். நன்றாக பதில் கூறிய மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். பிறகு ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின், சத்துணவு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு, உணவு சமைக்கும் காய்கறி உள்ளிட்ட பொருள்களின் தரம், உணவை சாப்பிட்டு சோதித்து பார்த்தார். தொடர்ந்து, சமையல் கூடத்திற்கு புதிய பாத்திரங்களை வழங்கினார்.
முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, கமிஷனர் வீரமுத்துகுமார், கவுன்சிலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.