/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : நவ 09, 2025 06:28 AM

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் தினசரி அங்காடி கட்டுவதற்கான பணிகளை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
திண்டிவனம் இந்திரகாந்தி பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த பழமையான கடைகள் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் 4.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக தினசரி அங்காடி கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஜூன் மாதம் நடந்தது.
தற்போது பஸ்கள் வந்து செல்லும் இடத்தில் கட்டட பணிகள் நடைபெறுவதற்காக பில்லர் போடும் பணி நடைபெற உள்ளது.
இந்த பணிகளை, மஸ்தான் எம்.எல்.ஏ., நேற்று காலை ஆய்வு செய்தார். பணிகள் குறித்து, நகராட்சி கமிஷனர் பானுமதியிடம் விபரம் கேட்டறிந்தார். விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
தி.மு.க., நகர செயலாளர் கண்ணன், முன்னாள் செயலாளர் கபிலன், கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், அரும்பு குணசேகர், ஷபியுல்லா, பாஸ்கர், சத்தீஷ், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ் உடனிருந்தனர்.
பஸ்கள் நிறுத்தம் பஸ் நிலையம் உள்ளே பில்லர் எழுப்பும் பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 12ம் தேதியிலிருந்து பஸ் நிலையத்திற்கு பஸ்கள் உள்ளே வருவது தற்காலிமாக நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இதனால் பஸ் நிலையத்திற்கு வெளி பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

