தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புதிய தார் சாலை பணி :எம்.எல்.ஏ., ஆய்வு

 புதிய தார் சாலை பணி :எம்.எல்.ஏ., ஆய்வு

 புதிய தார் சாலை பணி :எம்.எல்.ஏ., ஆய்வு


ADDED : பிப் 02, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 04:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட ராகவன்பேட்டை பிரதான சாலையில் தார் சாலை பணியை மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகராட்சி 37வது வார்டு ராகவன்பேட்டை பகுதியில் உள்ள பிரதான சாலை பல ஆண்டுளாக சேதமான நிலையில், குண்டும், குழியுமாக இருந்தது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ராகவன்பேட்டை பிரதான சாலையில் 739 மீட்டர் துாரத்திற்கு புதிதாக தார் சாலை போடும் பணி நேற்று முன்தினம் நடந்தது.

இந்த பணிகளை, லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், நகர செயலாளர் வெற்றிவேல், கவுன்சிலர்கள் மணி, இளந்திரையன், புருஷோத்தமன், மணவாளன், நிர்வாகிகள் தாகீர், முத்து, ஒப்பந்ததாரர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us