UPDATED : அக் 30, 2026 08:59 PM
ADDED : அக் 30, 2026 08:54 PM

விழுப்புரம்: விழுப்புரம் ஆசாகுளத்தில் கழிவுநீர் வெளியேற்ற குழாய் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
விழுப்புரம் நகராட்சி, 36வது வார்டு ஆசாகுளம் பகுதியில் குடியிருப்புகளின் கழிவுநீரை வெளியேற்ற, தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் அப்பகுதி குடியிருப்பு கழிவுநீரை வெளியேற்ற குழாய் இணைப்பு அமைத்து, அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, வார்டு கவுன்சிலர் மணவாளன், நகர தொழிலாளர் அணி அமைப்பாளர் சந்தோஷ்குமார், வார்டு செயலாளர் சுந்தர், பொருளாளர் பிரகாஷ், அவைத் தலைவர் சேகர், பிரதிநிதி பாஸ்கர், மகளிரணி திலகவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
