/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழைநீர் வடிகால் பணி எம்.எல்.ஏ., ஆய்வு
/
மழைநீர் வடிகால் பணி எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : அக் 29, 2025 09:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில்மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
திண்டிவனம் நகர பகுதியில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால், திண்டிவனம் - மரக்காணம் சாலையில் உள்ள வகாப் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்காலை அர்ஜூனன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
அப்போது, அப்பகுதிகளில் மழைநீர் தேங்காமல் கால்வாய்களை துார்வார வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
அப்போது, மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் பாலசுந்தரம், நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ், நகர்மன்ற கவுன்சிலர் ஜனார்த்தனன் உடனிருந்தனர்.

